| 5567. | நின்றனதிசைக்கண் வேழம் நெடுங் களிச் செருக்கு நீங்க, தென் திசைநமனும் உள்ளம் துணுக்கென, சிந்தி வானில் பொன்றல் இல்மீன்கள் எல்லாம் பூ என உதிர, பூவும் குன்றமும்பிளக்க, வேலை துளக்குற, கொட்டினான் தோள். |
திசைக்கண்நின்றன வேழம் - எட்டுத் திசைகளிலும்நின்றவையான திக்கு யானைகள்; நெடும் களிச் செருக்கு நீங்க - (தமது) மதக் களிப்பு நீங்கவும்; தென் திசை நமனும் - தெற்குத் திக்குப் பாலகனாகிய யமனும்; துணுக்கு என உள்ளம் சிந்த - திடுக்கிட்டு மனம் சிதறவும்; வானில் பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர - ஆகாயத்தி்ல் அழிவு பெறாத நட்சத்திரங்கள் யாவும் மலர்களைப் போலக் கீழே உதிர்ந்து விழவும்; பூவும் குன்றமும் பிளக்க - பூமியும் (அதன் மேலுள்ள) மலைகளும் பிளந்து போகவும்; வேலை துளக்குற தோள் கொட்டினான் - (அனுமன் தனது) தோளைத் தட்டினான். பூ - பூமி; மீன்- நட்சத்திரங்கள். (18) |