5574. | எறிந்தன,எய்தன, இடி உரும் என மேல் செறிந்தனபடைக்கலம், இடக் கையின் சிதைத்தான், முறிந்தன தெறும்கரி; முடிந்தன தடந் தேர்; மறிந்தன பரிநிரை-வலக் கையின் மலைந்தான்.* |
எறிந்தன, எய்தன- அரக்கர்களால் வீசி எறியப்பட்டனவும், எய்யப்பட்டனவுமாகிய; இடி உரும் என மேல் செறிந்தன படைக்கலம் - பேரிடி போலத் தன் மேல் நெருங்கி செறிந்தனவான ஆயுதங்களை எல்லாம்; இடக் கையின் சிதைத்தான் - (தனது) இடக்கையால் அழித்துத்தள்ளி; வலக் கையின் மலைந்தான் - தன் வலக்கையால் போர் செய்யலானான்; தெறும் கரி முறிந்தன - (அதனால்) எதிர்த்து அழிக்கும் வலிமையுள்ளயானைகள் முறிபட்டு இறந்தன; தடம் தேர் முடிந்தன - பெரிய தேர்கள் சிதைந்து போயின; பரிநிரை மறிந்தன - குதிரைகளின் கூட்டம் கீழே விழுந்து இறந்தன. அனுமன் தன் இருகைகளாலும் விரைந்து போர் செய்த திறம் கூறப்பட்டது. சிதைத்தான்; முற்றெச்சம். (25) |