5581. | மல்லொடுமலை மலைத் தோளரை, வளை வாய்ப் பல்லொடும்,நெடுங் கரப் பகட்டொடும், பருந் தாள் வில்லொடும், அயிலொடும், விறலொடும், விளிக்கும் சொல்லொடும், உயிரொடும் நிலத்தொடும்,- துகைத்தான். |
மல்லொடு மலை -மல்யுத்தத்தில போர் செய்யும்; மலைத் தோளரை - மலை போன்ற தோள்களை உடைய வீரர்களை; வாய் வளை பல்லொடும் - அவர்களுடைய வாயில் உள்ள வளைந்த பற்களோடும்; நெடும் பகடு கரமொடும் - நீண்ட வலிய கைகளோடும்; பரும் தாள் வில்லொடும் அயிலொடும் - (அவர்கள் கைகளில் கொண்ட) பருத்த அடியை உடைய வில்லுகளோடும், வேல்களோடும்; விறலொடும் - வீரத்தோடும்; விளிக்கும் சொல்லொடும் - கூவுகின்ற சொற்களோடும்; உயிரொடும் - அவர்கள் உயிர்களோடும்; நிலத் தொடும் துகைத்தான் - பூமியோடு பூமியாய் அழுந்த மிதித்து அழித்தான். பகடு - வலிமை;'பகட்டு மார்பின்' (புற, நா, 88,4) (32) |