5588. | சக்கரம்,தோமரம், உலக்கை, தண்டு, அயில், வாள், மிக்கன தேர்,பரி, குடை, கொடி, விரவி உக்கன; குருதிஅம்பெருந் திரை உருட்டிப் புக்கன கடலிடை,நெடுங் கரப் பூட்கை. |
உக்கன குருதி அம்பெரும் திரை உருட்டி - அரக்கர்கள் சிந்திய இரத்த வெள்ளத்துப் பெரும் அலைகளால் உருட்டப்பட்டதால் (அவற்றின் இடையே); சக்கரம், தோமரம் - சக்கரங்களும் பெரிய தண்டாயுதங்களும்; உலக்கை, தண்டு, அயில்வாள் - உலக்கைகளும் கதைகளும் வேல்களும் வாள்களும்; மிக்கன - மிகுந்தனவாகி; தேர், பரி, குடை, கொடி விரவி - தேர்களும், குதிரைகளும், குடைகளும் கொடிகளும் ஒன்றாகக் கலந்து; நெடும் கரப் பூட்கை - நீண்ட துதிக்கைகளை உடைய யானைகள்; கடல் இடை புக்கன - கடலின் இடையே போய்ப் புகுந்தன. பூட்கை - பூண் + கை; யானை. (39) |