5594.

'செய்தி,செய்தி, சிலை கைக் கொண்டால், வெறுங்,
                             கை திரிவோரை,
நொய்தின்வெல்வது அரிதோ ?' என்னா, முறுவல்
                             உக நக்கான்;
ஐயன், அங்கும்இங்கும் காலால் அழியும் மழை
                             என்ன,
எய்த எய்த பகழிஎல்லாம், எழுவால் அகல்வித்தான்.

     ஐயன் - சிறந்தோனானஅனுமன்; சிலை கைக் கொண்டால் - நீ
வில்லைக் கையில் கொண்டால்; வெறும் கை திரி வோரை - ஆயுதம் இன்றி
வெறும் கைகளோடு திரிகின்றவர்களை; நொய்தின் வெல்வது அரிதோ
என்னா -
எளிதில் வெல்வது அரிய செயலாகுமா ? என்று சொல்லி; முறுவல்
உக நக்கான் -
பற்கள் வெளியில் தோன்றுமாறு சிரித்து; எய்த எய்த பகழி
எல்லாம் -
சம்பு மாலி மேன் மேலும் தூண்டிய அம்புகள் அனைத்தையும்;
காலால் அழியும் மழை என்ன -
காற்றினால் சிதறி அழியும்
மழைத்தாரைகள் போல; எழுவால் - தன் கையில் கொண்ட எழு என்னும்
ஆயுதத்தால்; அங்கும் இங்கும் - எல்லாப் புறங்களிலும்; அகல் வித்தான் -
நழுவிச் சிதறிப் போகுமாறு நீக்குவித்தான்.

     செய்தி செய்தி;அடுக்கு இகழ்ச்சிப் பொருளது. எய்த. எய்த; அடுக்கு
விரைவுப் பொருளது.                                         (45)

அனுமன் கை எழுவைச்சம்புமாலி அறுத்து வீ்ழ்த்தல்