5598.

பரிந்துபுலம்பும் மகளிர் காண, கணவர் பிணம் பற்றி,
விரிந்த குருதிப்பேராறு ஈர்த்து மனைகள்தொறும்
                                     வீச,
இரிந்ததுஇலங்கை; எழுந்தது அழுகை; 'இன்று,
                            இங்கு, இவனாலே
சரிந்தது,அரக்கர் வலி' என்று எண்ணி, அறமும்
                            தளிர்த்ததால்.

     விரிந்த குருதிபேர் ஆறு - பரந்த இரத்தவெள்ளமாகிய பெரிய
ஆறு; பிரிந்து புலம்பும் மகளிர் காண - தம் கணவர் இறந்தமையால்
இரங்கிப் புலம்பும் பெண்கள் காணுமாறு; கணவர் பிணம் பற்றி ஈர்த்து
மனைகள் தொறும் வீச -
அவரவர் கணவர்களுடைய பிணங்களைப் பிடித்து
இழுத்து வந்து அவரவர் வீடுகள் தோறும் கொண்டு வந்து வீச; இலங்கை
இரிந்தது -
(அதைக் கண்ட) இலங்கை நகரம் நிலை குலைந்து அலைந்தது;
அழுகை எழுந்தது -
அழுகைக் குரல் எங்கும் மேலோங்கியது; இன்று
இங்கு இவனாலே -
இன்றைய தினம், இந்த இலங்கையில் இந்தக்
குரங்கினால்; அரக்கர் வலி சரிந்தது என்று எண்ணி - அரக்கர்களுடைய
வலிமை அழிந்தது என்று நினைத்து; அறமும் தளிர்த்தது - அறக்கடவுளும்
மனம் களித்தது.                                           (49)