அனுமனைப் பிடிக்கஇராவணனே எழுந்தபோது
படைத்தலைவர்பேசுதல் 

5600.

என்னும்அளவின், எரிந்து வீங்கி எழுந்த
                          வெகுளியான்,
உன்ன, உன்ன,உதிரக் குமிழி விழியூடு
                         உமிழ்கின்றான்,
'சொன்னகுரங்கை, யானே பிடிப்பென், கடிது
                          தொடர்ந்து' என்றான்,
அன்னது உணர்ந்தசேனைத் தலைவர் ஐவர்
                          அறிவித்தார்.

     என்னும் அளவின்- என்றுஅவர்கள் கூறிய அளவில்; எரிந்து
வீங்கிஎழுந்த வெகுளியான் -
பற்றி யெரிந்து மிகுதியாகக் கிளம்பின
சினத்தைஉடைய இராவணன்; உன்ன உன்ன - (அவ்வாறு சம்பு மாலி
முதலியஅரக்கர்கள் இறந்த செய்தியை) நினைக்கும் தோறும்; விழியூடு
உதிரக் குமிழிஉமிழ்கின்றான் -
விழிகளின் வழியே இரத்தக்குமிழிகளைக்
கக்கிக்கொண்டு; சொன்ன குரங்கை - நீர் சொன்ன அந்தக் குரங்கை; யானே
கடிது -
நானே விரைந்து சென்று; தொடர்ந்து பிடிப்பேன் எனறான் -
பிடித்து வருவேன் என்று கூறினான்; அன்னது உணர்ந்த சேனைத் தலைவர்
ஐவர் அறிவித்தார் -
அதை உணர்ந்த படைத் தலைவர்களான ஐவர்
(இராவணனிடம் பின்வருமாறு) தெரிவிக்கலானார்கள்.

     அறிவித்ததுஅடுத்த படலத்தில் கூறப்படும். சேனைத்தலைவர் ஐவர்;-
விரூபாட்சன், யூபாட்சன்,துர்த்தரன்,பிரகசன்,பாசகர்ணன் என வான்மீகம் பெயர்
குறிப்பிடுகிறது.                                              (51)