5607.

தானை மாக்கொடி, மழை பொதுத்து உயர் நெடுந்
                                   தாள,
மானம் மாற்ற அருமாருதி முனிய, நாள் உலந்து
போன மாற்றலர்புகழ் எனக் கால் பொரப் புரண்ட;
வானயாற்று வெண்திரை என வரம்பு இல பரந்த.

     மழை பொதுத்துஉயர் நெடும் தாள - மேகத்தைக் குத்துமாறுமேலேஉயர்ந்து செல்லும் நீண்ட கால்களை உடையனவும்; வான
யாற்று வெண்திரை என வரம்பு இல பரந்த -
ஆகாய கங்கை யாற்றின்
வெண்மை நிறமுள்ள அலை போலப் பலவாக உள்ளனவுமான; தானை
மாக்கொடி -
அரக்கர் சேனையில் விளங்கிய பெரிய வெண்ணிறக் கொடிகள்;
மாற்ற அரு மானம் மாருதி முனிய - மாற்ற முடியாத பெருமை உடைய
அனுமன் கோபித்திட; நாள் உலந்து போன மாற்றலர் புகழ் என -
(அதனால்) ஆயுட்காலம் அழிந்து, வீரசுவர்க்கம் சென்ற பகைவர்களது புகழைப்
போல; கால் பொரப் புரண்ட - காற்று மோதுதலால் அசைந்தாடின.

       கால் -காற்று.                                        (7)