கலி விருத்தம் | 5620. | நிதிநெடுங் கிழவனை நெருக்கி, நீள் நகர்ப் பதியொடும்பெருந் திருப் பறித்த பண்டை நாள், 'விதி' என,அன்னவன் வெந்நிட்டு ஓடவே, பொதியொடும்வாரிய பொலன் கொள் பூணினார். |
நெடு நிதிக்கிழவனை - (பஞ்ச சேனாபதிகள்)பெருஞ் செல்வத்துக்குரியவனான குபேரனை; நெருக்கி - போரில் தாக்கி; நீள் நகர் பதியொடும் - நீண்ட நகரமாகிய அளகா புரியொடும்; பெருந் திருப் பறித்த பண்டை நாள் - அவன் பெருஞ் செல்வத்தையும் கவர்ந்து கொண்ட முற்காலத்தில்; அன்னவன் - அந்தக் குபேரன் ! விதி என வெந்நிட்டு ஓடவே - 'நம்; பண்டை வினை' என்று சொல்லி புறமுதுகிட்டு ஓடியவுடன்; பொதியோடும் வாரிய - சுமைகளாக வாரிக் கொண்ட; பொலன் கொள் பூணினார் - பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை உடையவர்கள். (20) |