அனுமனைக் கண்டஅரக்க வீரரின் ஐயப்பாடு 5628. | 'புன் தலைக் குரங்கு இது போலுமால் அமர் வென்றது !விண்ணவர் புகழை வேரொடும் தின்ற வல்அரக்கரைத் திருகித் தின்றதால் !' என்றனர்,அயிர்த்தனர், நிருதர் எண்ணிலார். |
எண் இலார்நிருதர் - (அங்கிருந்த)கணக்கில்லாத அரக்கர்கள்; புன் தலைக் குரங்கு இது போலும் - இழிவான தலையை உடைய குரங்கு இது தானோ; அமர் வென்றது - பெரிய போரில் வெற்றி கொண்டது; விண்ணவர் புகழை வேரொடும் தின்ற வல் அரக்கரை - தேவர் புகழை அடியோடு ஒழித்த வலிய அரக்கர்களை; திருகித் தின்றது - முறுக்கித் தின்றது ?; என்றனர் அயிர்த்தனர் - என்று ஐயம் கொண்டனர். போலும் என்றஒப்பில் போலியும் ஆல் என்ற அசையும் சேர்ந்து நின்று, நம்ப முடியாமையை உணர்த்தின. (28) |