| 5640. | தாரொடும்,உருளொடும், தடக் கையால் தனி வீரன் விட்டுஎறிந்தன, கடலின் வீழ்வன, வாரியின் எழும்சுடர்க் கடவுள் வானவன் தேரினைநிகர்த்தன, புரவித் தேர்களே. |
தனி வீரன் -ஒப்பற்றவீரனான அனுமன்; தடக்கையால் விட்டு எறிந்தன - வலிய தன்கைகளால் வீசி எறியப்பட்டவனவாகி; கடலின் வீ்ழ்வன - கடலில் சென்று வீழ்வனவாகிய; தாரொடும் உருளொடும் - கிண்கிணியோடும் சக்கரத்தோடும் கூடியனவாய்க்; புரவித் தேர்கள் - குதிரைகள் பூட்டப்பட்ட தேர்கள்; வாரியின் எழும் - கடலில் தோன்றுகின்ற; சுடர்க்கடவுள் வானவன் தேரினை நிகர்த்தன - ஆயிரம் கதிர்களோடு கூடிய கடவுளாகிய சூரியனுடைய தேர்போல் காணப்பட்டன. கடலில் விழுந்ததேர்கள், கடலினின்று தோன்றும் சூரியனது தேரை ஒத்தன. (40) |