தானை அழிந்தபின்சேனைத்தலைவர் ஐவரும் அனுமனுடன்பொருது வீழ்தல் 5647. | உலந்ததுதானை; உவந்தனர் உம்பர்; அலந்தலை உற்றது,அவ் ஆழி இலங்கை; கலந்தது, அழும்குரலின் கடல் ஓதை; வலம் தருதோளவர் ஐவரும் வந்தார். |
தானை உலந்தது -சேனைமுழுவதும் அழிந்துவிட்டது; உம்பர் உவந்தனர் - (அதுகண்டு) தேவர்கள் மகிழ்வுற்றனர்; அவ் ஆழி இலங்கை அலம் தலை உற்றது - கடல் சூழ்ந்த அந்த இலங்கை நகரம் குழப்பம் அடைந்தது; அழும் குரலின் கடல் ஓதை கலந்தது - இலங்கையிலுள்ளாரது அழு குரலாகிய கடலோசை எங்கும் பரவிற்று; வலம் தருதோளவர் ஐவரும் வந்தார் - (அப்போது) வலியைத் தரும் தோள்களை உடைய பஞ்ச சேனாபதிகளும் போர் புரிய எதிர்த்து வந்தனர். சேனைகளின்அழிவுக்குப் பிறகு, படைத்தலைவர் ஐவரும் அனுமனை எதிர்க்க வந்தனர் என்றவாறு. (47) |