5652. | ஒழிந்தவர்நால்வரும், ஊழி உருத்த கொழுந்துறு தீ எனவெய்துறு கொட்பர், பொழிந்தனர்,வாளி; புகைந்தன கண்கள்; விழுந்தன சோரி,அவ் வீரன் மணித் தோள். |
ஒழிந்தவர்நால்வரும் - மற்றை நான்கு சேனைத்தலைவர்களும்; ஊழிஉருத்த - ஊழிக்காலத்தில் சினந்து வெளிக் கிளம்பின; கொழுந்துறு தீ என- சுடர்க் கொழுந்துகள் பொருந்திய பெரும் தீயைப் போல; வெய்துறு கொட்பர் - வெப்பம் மிக்க சுழற்சியினராய்; வாளி பொழிந்தனர் - அம்புகளை (அனுமன் மீது) சொரிந்தனர்; கண்கள் புகைந்தன - அவ்வரக்கருடைய கண்கள் (கோபத்தினால்) புகைகளைக் கக்கின; அவ் வீரன் மணித் தோள் சோரி விழுந்தன - அந்த வீரனான அனுமனது தோளிலிருந்து இரத்தம் ஒழுகியது. 'உறு தீ' இதனைக்கொண்டு, மிகுந்த தீ எனவும் பொருள் கொள்ளலாம். கொட்பு - சுழற்சி; கொட்டர் - சுழலுதலை உடையவர்கள்; உடற்சுழற்சி உள்ளச் சுழற்சி இரண்டனையும் குறிக்கும். (52) |