5654.

தொடுத்த,தொடுத்த, சரங்கள் துரந்த;
அடுத்து, அகன்மார்பின் அழுந்தி, அகன்ற;
மிடல்தொழிலான், விடு தேரொடு நொய்தின்
எடுத்து,ஒருவன்தனை, விண்ணில் எறிந்தான்.

     தொடுத்ததொடுத்த - மேன் மேலும்அந்நால்வர் பூட்டி வி்ட்ட;
சரங்கள் துரந்த -
அம்புகள் அங்கு நின்றும் வெளிப்பட்டனவாய்; அகல்
மார்பின் அடுத்து அழுத்தி அகன்ற -
(அனுமனது) அகன்ற மார்பில்
பொருந்தித் தைத்து அப்பாற் சென்றன; மிடல் தொழிலான் - (அப்போது)
வலிய போர்த்தொழிலை உடைய அனுமன்; ஒருவன் தனை - (அந்நால்வருள்)
ஒருவனை; விடு தேரொடு நொய்தின் எடுத்து - (அவன்) செலுத்திவந்த
தேரோடு எளிதாகத் தூக்கி; விண்ணில் எறிந்தான் - ஆகாயத்தில் வீசினான்.

     நால்வரின்ஒருவனைத் தேரோடு ஆகாயத்தில் அனுமன் வீசினன்
என்பதாம்.                                                  (54)