5655. | ஏய்ந்து எழுதேர் இமிழ் விண்ணினை எல்லாம் நீந்தியது;ஓடி நிமிர்ந்தது; வேகம் ஓய்ந்தது;வீழ்வதன்முன், உயர் பாரில் பாய்ந்தவன்மேல், உடன் மாருதி பாய்ந்தான். |
ஏய்ந்து எழு தேர்- (அனுமனால்) எடுத்து எறியப்பட்டு மேல் எழுந்த தேர்; இமிழ் விண்ணினை எல்லாம் - ஒலிக் குணம் உடைய ஆகாய வெளி எங்கும்; ஓடி நீந்தியது - விரைந்து கடந்ததாகி; நிமிர்ந்தது வேகம் - வேகத்தால் மிகுந்தது; ஓய்ந்தது - பின்னர் வேகம் குறைந்து போய்; வீழ்வதன் முன் - கீழே விழுவதற்கு முன்னமே; உயர் பாரில் பாய்ந்தவன் மேல் - சிறந்த பூமியில் பாய்ந்து குதித்த அவ்வரக்கர் தலைவன் மீது; உடன் மாருதி பாய்ந்தான் - உடனே அனுமன் பாய்ந்தான். எறியப்பட்டவேகத்திற்குத் தக்க வேகத்தில் தேர் பறந்தது என்பதை 'ஏய்ந்து எழு தேர்' எனக் குறித்தார். (55) |