5656. | மதித்தகளிற்றினில் வாள் அரிஏறு கதித்ததுபாய்வதுபோல், கதி கொண்டு குதித்தனன்;மால் வரை மேனி குழம்ப மிதித்தனன்-வெஞ் சின வீரருள் வீரன். |
வெம் சினவீரருள் வீரன் - கொடிய சினம் மிக்கவீரர்களுள் பெரு வீரனாகிய அனுமன்; மதித்த களிற்றினில் - தருக்குற்ற யானையின் மீது; வாள் அரி ஏறு கதித்தது பாய்வதுபோல - ஒளிதங்கிய ஆண்சிங்கம் கோபம் கொண்டு பாய்வது போல; கதி கொண்டு குதித்தான் - விரைவாக அவன்மீது குதித்து; மால் வரை மேனி குழம்ப மிதித்தான் - பெரிய மலை போன்ற (அந்த அரக்கனுடைய) உடம்பு சிதைந்து இரத்தம் குழம்பும்படி கால்களால் மிதித்துக் கொன்றான். பஞ்சசேனாபதிகளுள் இரண்டாமவன் கொல்லப்பட்டான். (56) |