5658.

திரண்டுஉயர் தோள் இணை அஞ்சனை சிங்கம்,
அரண் தரு விண்உறைவார்களும் அஞ்ச,
முரண் தரு தேர்அவை ஆண்டு ஒருமூன்றில்
இரண்டை இரண்டுகையின்கொடு எழுந்தான்.

     திரண்டு உயர்தோள் இணை அஞ்சனை சிங்கம் - பருத்து
உயர்ந்தஇரண்டு தோள்களை உடைய ஆஞ்சனேயன்; அரண் தரு விண்
உறைவார்களும் அஞ்ச -
காவலை உடைய தேவலோகத்தில் வாழ்பவரான
தேவர்களும் அஞ்சும்படி; முரண் தருதேர் அவை ஒரு மூன்றில் -
தன்னோடு மாறுபட்ட மூன்று தேர்களுக்குள்ளே; ஆண்டு - அப்போது;
இரண்டை இரண்டு கையின் கொடு எழுந்தான் - தன் இரண்டு கைகளிலே
இரண்டு தேர்களை எடுத்துக் கொண்டு மேலே கிளம்பினான்.          (58)