5659.

தூங்கினபாய் பரி; சூதர் உலைந்தார்;
வீங்கினதோளவர் விண்ணின் விசைத்தார்;
ஆங்கு, அது கண்டு,அவர் போய் அகலாமுன்,
ஓங்கிய மாருதி,ஒல்லையின் உற்றான்.

     பாய் பரிதூங்கின - (அனுமன் தேர்களைப்பற்றி மேலே எழும்
போதுபூட்டியிருந்த) பாய்ந்தோடும் குதிரைகள் அந்தரத்தில் தொங்கின; சூதர்
உலைந்தார் -
தேரோட்டுவோர் அழிந்தார்; வீங்கின தோளவர் விண்ணில்
விசைத்தார் -
(அத்தேர்களிலிருந்த) பருத்த தோள்களை உடைய அவ்விரு
தலைவர்களும் (அத்தேரினின்று) வான் வழியே விரைந்தனர்; ஆங்கு அது
கண்டு -
அப்போது அவர்கள் வானத்தில் செல்வதைக் கண்டு; அவர் போய்
அகலாமுன் -
அவர்கள் நீங்கித் தப்புவதற்கு முன்னம்; ஓங்கிய மாருதி -
பெரு வடிவு படைத்த அனுமன்; ஒல்லையின் உற்றான் - விரைவில்
(அவர்களைச் சென்று) கிட்டினான்.

     தூங்குதல் -தொங்குதல்; ஒல்லை - விரைவு.                (59)