5677.

மந்திரக்கிழவர் மைந்தர், மதி நெறி அமைச்சர்
                                        மக்கள்,
தந்திரத்தலைவர் ஈன்ற தனயர்கள், பிறரும்,
                                   தாதைக்கு
   
அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி
                                  ஆனோர்,
எந்திரத்தேரர், சூழ்ந்தார்-ஈர்-இரண்டு இலக்கம்
                                  வீரர்.

     மந்திரக்கிழவர் மைந்தர் - மந்திராலோசனைக்குரியோருடைய
குமாரர்கள்; மதி நெறி அமைச்சர் மக்கள் - புத்தியில் மிக்க மந்திரிகளுடையமைந்தர்கள்; தந்திரத் தலைவர் ஈன்ற தனயர்கள் -
சேனைத்தலைவர்கள்பெற்ற புதல்வர்கள்; தாதைக்கு அந்தரத்து அரம்பை
மாரில், தோன்றினர்ஆதி ஆனோர் பிறரும் -
தந்தையாகிய
இராவணனுக்குத் தேவலோகத்துத்தெய்வமகளிரிடம், பிறந்த புத்திரர் முதலிய
பிறரும் ஆகிய; ஈர் இரண்டுஇலக்கம் வீரர் - நான்கு லட்சம் வீரர்கள்;
எந்திரத் தேரர்
 சூழ்ந்தார் - எந்திரமுள்ளதேரின் மீது ஏறியவர்களாய்,
அக்க குமாரனைச் சூழ்ந்து கொண்டு போருக்குச் சென்றனர்.

     அக்ககுமாரனுடன்சென்ற நான்கு லட்சம் வீரர்களின் வகை
கூறப்பட்டது. மந்திரக் கிழவர் முதல்வராகக் கூறியவர் நால்வராதலால்,
ஒவ்வொருவகையினரின் குமாரரும் ஒவ்வொரு லட்சம் வீரர் என்க. அந்தரம் -
மேலுலகம், விண்ணுலகம்.                                     (10)