5678.

தோமரம்,உலக்கை, சூலம், சுடர் மழு, குலிசம்,
                           தோட்டி,
ஏ மரு வரி வில்,வேல், கோல், ஈட்டி, வாள், எழு,
                            விட்டேறு,
மா மரம், வீசுபாசம், எழு முளை, வயிரத் தண்டு,
காமரு கணையம்,குந்தம், கப்பணம், கால நேமி

     தோமரம் -தண்டாயுதம்; உலக்கை, சூலம் - உலக்கைகள், திரி
சூலங்கள்; சுடர் மழு, குலிசம் -  ஒளிவீசும் கோடாலிகள், வச்சிராயுதங்கள்;
தோட்டி -
அங்குசங்கள்; ஏமரு வரி வில் - அம்பு பொருந்திய கட்டமைந்த
விற்கள்; வேல் கோல் - வேலாயுதங்கள் அம்புகள்; ஈட்டி, வாள் -
எறியீட்டிகள், வாள்கள்; எழு, விட்டேறு - இரும்புத்தடிகள், எறிகோல்கள்;
மாமரம் -
பெரிய மரங்கள்; வீசு பாசம் - வீசுதற்குரிய கயிறுகள்; எழு
முளைவயிரத் தண்டு -
பகைவர் மேல் எழுகிற வயிரத்தாலான
தண்டாயுதங்கள்; காமரு கணையம் குந்தம் - அழகு பொருந்தியவளைதடிகள்
குத்துக் கோல்கள்; கப்பணம் - யானை நெருஞ்சி முட்கள்; காலநேமி -
தவறாமல் கொல்லவல்ல சக்கராயுதங்கள்.....

     அடுத்த பாடலுடன்முடியும். அரக்க வீரர்கள் கொண்டு சென்ற
போர்க்கருவிகளின் வகைகள் கூறப்பட்டன.                        (11)