5682.

வெயில் கரமணிகள் வீசும் விரி கதிர் விழுங்க,
                           வெய்ய
அயில் கரமணிகள் காலும் அவிர் ஒளி பருக,
                           அஃகா
எயிற்று இளம்பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க,
                           யாணர்,
உயிர்க்குஉலவுஇரவும் அன்று, பகல் அன்று என்று
                           உணர்வு தோன்ற;

     வெயில் கரமணிகள் - வெயிலைப் போன்று ஒளிவிளங்குகின்ற
(ஆபரணங்களில் உள்ள) இரத்தினங்கள்; வீசும்
 விரிகதிர் விழுங்க -
உலகம்முழுவதும் பரவி விரிந்த சூரியனது ஒளியை அடக்கவும்; வெய்ய
அயில்கரம் -
கொடிய வேலாயுதங்களினால் தோன்றுகின்ற ஒளி; மணிகள்
காலும் அவிர் ஒளி பருக -
(ஆபரணங்களில் இழைத்த) இரத்தினங்கள்
வெளியிட்டு விளங்குகின்ற ஒளியை அடக்கவும்; அஃகா எயிறு இளம்பிறை
ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க -
குறைவுபடாத அரக்கர்களுடைய பற்களாகிய
இளம் பிறைகள் உண்டாக்கிய விளங்கும் ஒளியில் ஒதுங்கி மறையவும்; யாணர்
உயிர்க்கு -
(இவ்வாறு இருத்தலால்) (பிறப்புத் தோறும்) புதிது, புதிதாகப்
பிறக்கும் உயிர்க் கூட்டத்திற்கு; உலவு இரவும் அன்று - (இது உலகத்தில்)
தோன்றுகின்ற இராக்காலமும் அல்ல; பகல் அன்று என்று - (அவ்வாறே
உலகத்துத்தோன்றும்) பகலும் அல்ல என்று; உணர்வு தோன்ற - ஓருணர்ச்சி
உண்டாகவும்...

     'இடத்துத்துள்ள'என்று அடுத்த கவியோடு தொடரும். கரம் - ஒளி.
யாணர் - புதுமை. பிறப்புத் தோறும் புதுமை கொள்வதால் 'யாணர் உயிர்'
என்றார்.                                                (15)