5683. | ஓங்கு இருந்தடந் தேர் பூண்ட உளை வயப் புரவி ஒல்கித் தூங்கின வீழ,தோளும் கண்களும் இடத்துத் துள்ள, வீங்கின மேகம்எங்கும் குருதி நீர்த் துள்ளி வீழ்ப்ப, ஏங்கின காகம்ஆர்ப்ப, இருள் இல் விண் இடிப்ப மாதோ; |
ஓங்குஇருந்தடந்தேர் பூண்ட - உயர்ந்த மிகப்பெரியதேர்களில் கட்டப்பெற்ற; உளை வயப் புரவி - பிடரிமயிரை உடைய குதிரைகள்; ஒல்கித்தூங்கின வீழ - சோர்ந்து தூங்கி விழவும்; தோளும் கண்களும் இடத்துத்துள்ள - இராக்கதரது தோள்களும் கண்களும் இடப்பக்கத்துத் துடிக்கவும்;வீங்கின மேகம் - மிக்குள்ள மேகங்கள்; எங்கும் குருதி நீர்த் துள்ளிவீழ்ப்ப - எவ்விடத்தும் இரத்தத் துளியைச் சொரியவும்; ஏங்கின காகம்ஆர்ப்ப - ஏங்கியிருந்த காகங்கள் (மகிழ்ச்சி கொண்டு) ஆரவாரிக்கவும்;இருள் இல் விண் இடிப்ப - இருள் அடையாத (நிர்மலமாயிருந்த) ஆகாயம்இடி முழங்குவது போல ஒலி உண்டாக்கவும். மாது, ஓ: அசைநிலைகள். 'காற்றின் சேய் வரவு கண்டான்' என அடுத்த கவியோடு முடியும். பகற்காலத்தே மேக மூட்டம் நேரிடின் ஒளி குறையும், இங்கே இருள் இல் விண் என்றது மேக மூட்டத்தால் இருள் சூழாத ஆகாயத்தைச் சுட்டிற்று. பகற் காலத்தில்மேகம் இல்லாமல், திடீரென்று மேகம் கூடி இடி முழங்கிவெள்ளிடி என்பர். இது தீய சகுனம். இங்கு, குறிக்கப் பெற்ற அனைத்தும்அக்ககுமாரனுக்கும் அவன் படைக்கும் இனி உண்டாகும் கேட்டை உணர்த்தும்உற்பாதங்கள் (தீய குறிகள்) ஆகும். (16) |