அக்ககுமாரன்,அனுமனை இழித்துப்பேசிய
போதுதேர்ப்பாகன், 'தகாது' எனல்

5688.

என்றவன்,உவந்து, விண் தோய் இந்திர சாபம்
                          என்ன
நின்றதோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை,
வன் தொழில்அரக்கன் நோக்கி, வாள் எயிறு
                          இலங்க நக்கான்;
'கொன்றதுஇக்குரங்கு போலாம், அரக்கர்தம்
                         குழாத்தை !' என்றான்.

     என்றவன் -என்றுஐயுற்றவனாகி; உவந்து - மகிழ்வுற்று; விண் தோய்இந்திர சாபம் என்ன நின்ற தோரணத்தின் உம்பர் - வானத்தில்
பொருந்திய இந்திர வில்லைப் போல பல நிறத்துடன் விளங்குவதான தோரண
வாயிலின் மீது; இருந்த ஓர் நீதி யானை - தங்கியிருந்த ஒப்பற்ற
நெறியுடையவனான அனுமனை;
வன் தொழில் அரக்கன்நோக்கி -
கொடுந்தொழிலையுடையஅக்ககுமாரன்பார்த்து; அரக்கர் குழாத்தைக்
கொன்றது இக் குரங்கு போலாம் என்றான்-
அரக்கர் கூட்டத்தை
எல்லாம் கொன்றது இந்தச் சிறு குரங்குதானா என்றுகூறி; வாள் எயிறு
இலங்க நக்கான் -
ஒளி தங்கிய தன் பற்கள் தோன்றுமாறுஏளனமாகச்
சிரித்தான்.

     அனுமனின் உவப்புக்குக்காரணம் நல்ல போருக்கு வாய்ப்பு
வரவிருப்பது குறித்து. அனுமன், அரக்கனை எண்ணியது முதல் பாட்டில்.
இங்கு, அரக்கன் அனுமனை எண்ணியது கூறப்பட்டது. இரண்டு
எண்ணங்களின் வேறுபாடு நோக்கத்தக்கது.                       (21)