5729.

பத்தியில்தேர்கள் செல்ல, பவளக் கால் குடைகள்
                          சுற்ற,
முத்தினின்சிவிகைதன்னை முகில் எனத் தேர்கள்
                          சுற்ற,
மத்த வெங்கரிகள் எல்லாம் மழை என இருண்டு
                          தோன்ற,
தத்தியபரிகள்தன்னின் சாமரை பதைப்ப,-
                          வந்தான்.*

     பத்தியில்தேர்கள் செல்ல - வரிசையாக தேர்கள்செல்லவும்;
பவளக்கால் குடைகள் சுற்ற -
பவளத்தால் ஆகிய கால்களை உடைய
குடைகள்சூழ வரவும்; முத்தினின் சிவிகை தன்னை - முத்தாற் செய்யப்
பெற்றபல்லக்குகளை; முகில் எனத் தேர்கள் சுற்ற - மேகம் போலக் கரிய
மரத்தால் செய்யப்பெற்ற தேர்கள் சுற்றி வரவும்; மத்த வெங் கரிகள்
எல்லாம் -
மதம் உடைய கொடிய யானைகள் எல்லாம்; மழை என இருண்டு
தோன்ற -
மழை மேகம் போலக் கரிதாய்க் காட்சி அளிக்கவும்; தத்திய
பரிகள் தன்னின் -
தவழ்ந்து துள்ளும் குதிரைகளைப் போல; சாமரை
பதைப்ப -
வெண் கவரிகள் துடிக்க வந்தான்.                      (13)