5730. | சங்குகள்முழங்க, பேரி சகடைகள் இடியின் வீழ, வெங் குரல்திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்க, தொங்கலின்குழாமும் தூளி வெள்ளமும் விசும்பைத் தூர்க்க, திங்களின்குடைகள் பூப்ப, திசைக் களிறு இரிய,- வந்தான்.* |
சங்குகள் முழங்க- சங்குகள் ஒலிக்கவும், பேரி சகடைகள் இடியின் வீழ - பெருமுரசு, டமாரம் ஆகிய வாத்தியங்கள் இடிபோல முழக்கமிடவும்; வெங்குரல் திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்க - கொடிய ஒலியை உடைய திமிலை, கடுவை என்னும் வாத்திய ஒலிகளால் மரங்கள் அதிரவும்; தொங்கலின் குழாமும் - மாலைக் கூட்டமும்; தூளி வெள்ளமும் - புழுதித்திரளும்; விசும்பைத் தூர்க்க - ஆகாயத்தை இல்லாதபடி அடைக்கவும்;திங்களின் குடைகள் பூப்ப - சந்திரனைப் போல இடை இடையே குடைகள்பொலிவுறத் தோன்றவும்; திசைக் களிறு இரிய - திக்கு யானைகள் நடுங்கவும்;வந்தான் -வந்தான். (14) |