5739. | பாறு எழுவாட் படை பத்திரு வெள்ளம்; ஆறு இரு கோடியின்வேலின் அமைந்தார்; கூறிடு வெள்ளம்மிடைந்தது குந்தம்;- வீறுடைமாருதிமேல் வரு சேனை.* |
வீறு உடை மாருதிமேல் வரு சேனை - வீர பராக்கிரமம்உடைய அனுமன் மேல் வருகின்ற சேனையின் அளவு; பாறு எழு வாட்படை பத்து இரு வெள்ளம் - போரிட எழுந்த வாள் படைகள் இருபது வெள்ளமாம்; வேலின் அமைந்தார் - வேலாற் போர் செய்யும் படைஞர்; ஆறிரு கோடி -பன்னிரண்டு கோடியர் ஆகும்; குந்தம் மிடைந்தது - குந்தப் படையால் போரிடுபவர்; கூறிடு வெள்ளம் - சொல்லப்படும் வெள்ளம் என்னும் அளவினை உடையவராவர். 'வெள்ளம்' என்பது தமிழில் பேரெண்ணைக் குறிக்கும் சொல். (23) |