5740.

பந்து எனஆடிய பாய் பரி எல்லாம்;
சிந்தையின்முந்தின தேர்கள் செறிந்த;
அந்தியின்மேனிய ஆனைகள் எல்லாம்
வந்தன, மண்ணைஅடித் துகள் மாய்ப்ப.*

     பந்து என ஆடியபாய் பரி எல்லாம் - பந்து போலத் துள்ளிக்
குதித்தாடும் பாய்கின்ற குதிரைகளும்; செறிந்த சிந்தையின் முந்தின தேர்கள்- நெருங்கினவாகிய மனத்தினும் வேகமாகச் செல்லும் தேர்களும்;
அந்தியின்மேனிய ஆனைகள் எல்லாம் -
மாலைக்காலம் போல இருண்ட
கரியமேனியுடைய யானைகளும்; அடித்துகள் மண்ணை மாய்ப்ப வந்தன -
தம் பாதத்தூசி நிலவுலகத்தை மறைத்து இல்லாமல் செய்யும்படி வந்தன.  (24)