5741. | சங்கொடுதாரைகள், சச்சரி, சின்னம், எங்கும்இயம்பின; பேரி இடித்த; வெங் குரலின்பறை விண்ணில் நிறைந்த; பொங்கி அரக்கர் பொருக்கென வந்தார்.* |
சங்கு, தாரை,சச்சரி, சின்னம் எங்கும் இயம்பின - வாத்தியங்கள் எங்கும் ஒலித்தன; பேரி இடித்த - பெருமுரசு இடியொலி எழுப்பியது; பறையின் வெங்குரல் விண்ணில் நிறைந்த - பறைகளின் கொடிய சப்தம் ஆகாயத்தில் நிரம்பியது; அரக்கர் பொங்கி பொருக்கென வந்தார் - அரக்கர்கள் சீறி விரைவாக வந்தார்கள். சச்சரி என்பதுபெருந்தாளம் ஆம் - 'சங்கொடு' எண்ணொடு பிரித்துப் பொருள் தொறும் கூட்டுக. (25) |