5742.

பார்த்தனபார்த்தன பாய் பரி எங்கும்;
தேர்த் திரள்தேர்த் திரளே திசை எங்கும்;
கார்த் திரள்மேனியின் இன் கயம் எங்கும்;
ஆர்த்தனர்மண்டும் அரக்கர்கள் எங்கும்.*

     எங்கும் பாய்பரிபார்த்தன பார்த்தன - எல்லா இடங்களிலும்
குதிரைகள் பார்க்கப் பெற்றனவாய் நிறைந்துள்ளன; திசை எங்கும்
தேர்த்திரள் தேர்த்திரள் -
எல்லாத் திக்குகளிலும் தேர்க் கூட்டங்களே
நிறைந்துள; எங்கும் கார்த்திரள் மேனியின் இன்கயம் - எல்லா
இடங்களிலும் மேகம் போன்ற கரிய உடம்புடைய இனிய யானைக்கூட்டங்களே;
எங்கும் ஆர்த்தனர் மண்டும் அரக்கர்கள் - எவ்விடங்களிலும்
ஆரவாரித்தவர்களாய் நெருங்கும் அரக்கர்களே.

     நால்வகைச்சேனைகளின் பெருமை கூறப்பெற்றது. 'பார்க்கும் இடம்
எங்கும்' என்பதைப் 'பார்த்தன' என்னும் அடுக்கு குறித்தது. அடுக்குகள் மிகுதி
பற்றி வந்தன. கயம் - யானை, 'ஏ' காரம் தேற்றம்.                  (26)