5743.

நுகம் படுதேர்அவை நூற்று இரு கோடி;
யுகம் பிறிதுஒன்று வந்து உற்றது என்ன,
அகம் படு காவில்அரக்கர்கள், இன்னம்
அகம்படிவீரர்கள் ஐ-இரு வெள்ளம்.*

     நுகம் படு தேர்அவை நூற்று இரு கோடி - நுகத்திற் குதிரைகள்
பூட்டப்பெற்ற தேர்கள் நூற்றிருகோடி ஆகும்; அகம்படு காஇல் அரக்கர்கள்
-
உட்படும் பாதுகாவல் இல்லாத  அரக்கர்கள்; யுகம் பிறிது ஒன்று வந்து
உற்றது என்ன -
வேறோர் யுகம் வந்து சேர்ந்தது போன்ற அளவினர்;
இன்னம் -
இதன்மேல்; அகம்படி
வீரர்கள் - உரிமைத் தொழில்செய்யும்
வீரர்கள்; ஐ இரு வெள்ளம் - பத்து வெள்ளம் ஆகும்.

    'கா இல்அரக்கர்' என்றது இவ்வரக்கர் சீறினால் மற்றவர்க்குக் காப்பு
இல்லை என்றபடியாம். அகம்படி வீரர் - போர் செய்வோர்க்கு வேண்டும்
உதவிகளைச் செய்யும் வீரர் என்பதாம் - இவர்களே பத்து வெள்ளமாயின்
போர் புரிவோர் புதுயுகம் வந்தது போன்ற கணக்கினர் என்றது பொருத்தமே.
                                                          (27)