5751.

என்று அவன்மாற்றம் இயம்புதல் கேட்டு,
குன்றம் எனும் புயவானர வீரன்,
'நன்று இது !நன்று இது ! என்ன நயந்தான்;
சென்று அணைவுற்றதுஅரக்கன சேனை;*

     என்று அவன்மாற்றம் இயம்புதல் கேட்டு - ஒருவன் 'இவன்
இந்திரசித்து' என்று சொல்லியதைக் கேட்டு; குன்றம் எனும் புய வானர
வீரன் -
மலை போன்ற தோள் உடைய அனுமன்; 'நன்று இது ! நன்று இது
! என்ன நயந்தான் -
நல்லது நல்லது என்றுரைத்துப்போரை விரும்பினான்
(இந்நிலையில்); அரக்கனசேனை - இந்திர சித்துவின் சேனை; சென்று
அணைவுற்றது -
(அனுமன்இருந்த தோரண வாயிலைச்) சென்று சேர்ந்தது.

     அவன் என்பது'இவன் இந்திர சித்து' என்று கூறிய அரக்கனைச்
சுட்டியதாகக் கொள்ளப் பொருள் நேரிதாகும்.                    (35)