5768.

'ஒன்றோ இதனால் வரும் ஊதியம் ?
                        ஒண்மையானைக்
கொன்றேன்எனின், இந்திரனும் துயர்க் கோளும்
                        நீங்கும்;

இன்றே, கடிகெட்டது, அரக்கர் இலங்கை; யானே
வென்றேன், அவ்இராவணன்தன்னையும், வேரொடு'
                           என்றான்.

     ஒண்மையானை -ஒளியுற்றஇந்த இந்திரசித்தை; கொன்றேன் எனின்
-
நான் கொன்றேன் என்றால்; இதனால் வரும் ஊதியம் ஒன்றோ - இந்தச்
செயலால் விளையக்கூடிய நன்மை ஒன்று தானோ !; இந்திரனும் துயர்
கோளும் நீங்கும் அரக்கர் இலங்கை இன்றே கடி கெட்டது -
இந்திரனும்
துயர் கொண்டிருத்தலை நீங்கும் அரக்கர்களுடைய இலங்கை நகரம் இன்றே
காவல் ஒழிந்ததாம்; அவ் இராவணன் தன்னையும் வேரொடு யானே
வென்றேன் -
அந்த இராவணனையும் வேரோடு நானேவென்றவனாவேன்;
என்றான் - என்று (அனுமன்) எண்ணினான்.

     இந்திரசித்தின்அழிவினால் ஏற்படும் நன்மைகளை அனுமன்
எண்ணினான் என்பதாம். ஒண்மை - ஒளி; ஒளி - தான் உளனாய காலத்து
மிக்குத் தோன்றுதலுடைமை.                                 (52)