சிரன்நெரிந்தவும், கண் மணி சிதைந்தவும், செறி தாள் தரன்நெரிந்தவும், முதுகு இறச் சாய்ந்தவும், தார் பூண் உரன்நெரிந்தவும், உதிரங்கள் உமிழ்ந்தவும், ஒளிர் பொற் குரன்நெரிந்தவும், கொடுங் கழுத்து ஒடிந்தவும்- குதிரை.
குதிரை சிரம்நெரிந்தவும் - (அனுமனால்அழிக்கப்பட்டு) குதிரைகள்தலை நொறுங்கிப் போயவையும்; கண்மணி சிதைந்தவும் - கண்களின்கருவிழிகள் சிதையப் பெற்றவையும்; செறிதாள்தரன் நெரிந்தவும் - வலிமைமிக்க கால்களின் தொகுதி நொறுங்கப் பெற்றவையும்; முதுகு இற சாய்ந்தவும்- முதுகு ஒடியக் கீழே சாய்ந்தவையும்; தார் பூண் உரன் நெரிந்தவும் -கிண்கிணி மாலை அணிந்த மார்பு நொறுங்கப் பெற்றவையும்; உதிரங்கள்உமிழ்ந்தவும் - இரத்தப் பெருக்குகளைக் கக்கியவையும்; ஒளிர் பொன் குரன்நெரிந்தவும் - பிரகாசமான பொற் சதங்கையை அணிந்த கால் குளம்புகள்நொறுங்கப் பெற்றவையும்; கொடும் கழுத்து ஒடிந்தவும் - வளைந்தகழுத்துக்கள் ஒடிந்தவையும் (ஆயின). குதிரைப் படைஅழிந்தமை கூறப்பட்டது. (56)