பிடியுண்டார்களும், பிளத்தலுண்டார்களும், பெருந் தோள் ஒடியுண்டார்களும்,தலை உடைந்தார்களும், உருவக் கடியுண்டார்களும்,கழுத்து இழந்தார்களும், கரத்தால் அடியுண்டார்களும்,அச்சமுண்டார்களும்-அரக்கர்.
அரக்கர் -காலாட்படையினரான அரக்க வீரர்கள்; பிடிஉண்டார்களும்- அனுமனால் பிடிக்கப்பட்டவர்களும்; பிளத்தல உண்டார்களும் - உடல்பிளக்கப்பட்டவர்களும்; பெரும்தோள் - பெரிய தோள்கள்; ஒடிஉண்டார்களும் - ஒடிபட்டவர்களும்; தலை உடைந்தார்களும் - தலைகள்உடையப் பெற்றவர்களும்; உருவ கடி உண்டார்களும் - (உடல் முழுவதும்)நன்றாகக் கடிக்கப் பெற்றவர்களும்; கழுத்து இழந்தார்களும் - கழுத்தைஇழந்தவர்களும்; கரத்தால் அடி உண்டார்களும் - கைகளால் அடிக்கப்பெற்றவர்களும்; அச்சம் உண்டார்களும் - பயம் கொண்டவர்களும்(ஆனார்கள்).
காலாட்படை அழிவுகூறப்பட்டது. (57)