5779.

'நல்லை ! நல்லை ! இஞ் ஞாலத்துள், நின் ஒக்க
                            நல்லார்
இல்லை !இல்லையால் ! எறுழ் வலிக்கு யாரொடும்
                            இகல
வல்லை ! வல்லை! இன்று ஆகும், நீ படைத்துள
                            வாழ்நாட்கு
எல்லை ! எல்லை!' என்று, இந்திரசித்துவும்
                            இசைத்தான்.

     நல்லை நல்லை -நீமிகவும் சாமர்த்தியம் உள்ளவன்; இஞ்
ஞாலத்துள் நின் ஒக்க நல்லார் இல்லை இல்லை -
இந்த உலகத்தில்
உனக்குச் சமமான சமர்த்தர்கள் யாரும் இல்லை; எறுழ்வலிக்கு - மிக்க
வலிமைத் திறத்தில்; யாரொடும் இகல வல்லை வல்லை - நீ எல்லோருடனும்மாறுபடுதற்கு மிகவும் வல்லவன்; நீ படைத்துள வாழ்
நாட்கு எல்லைஎல்லை இன்று ஆகும் -
நீ அடைந்துள்ள உன் வாழ்
நாளுக்கு இன்றேமுடிவு எல்லையாக அமையும்; என்று - என்று சொல்லி;
இந்திர சித்துவும்இசைத்தான் - இந்திரசித்தும் (இகழ்ந்து தன் வீரம்
தோன்றப் பெருமிதத்தோடு)கூறினான்.

     பிறரோடு வைத்துநோக்குமிடத்து நீ ஒப்புயர்வற்ற வீரன் என
விளங்குவையாயினும், நான் உன்னை இன்றைக்குக் கொன்று விடுவேன் என்று,
அனுமனை நோக்கி இந்திரசித்து வீரவாதம் கூறினான் என்க.          (63)