5781.

'இச் சிரத்தையைத் தொலைப்பென்' என்று, இந்திரன்
                                   பகைஞன்,
பச்சிரத்தம்வந்து ஒழுகிட, வானவர் பதைப்ப,
வச்சிரத்தினும்வலியன, வயிர வான் கணைகள்,
அச் சிரத்தினும்மார்பினும் அழுத்தலும்-அனுமன்.

     இந்திரன்பகைஞன்  - (அது கேட்டு)இந்திரசித்து; 'இ சிரத்தையை
தொலைப்பென்'என்று -
(இந்தக் குரங்கின்) இந்த நம்பிக்கையை
அழித்துவிடுவேன்' என்று கருதி; அச்சிரத்தினும் மார்பினும் - அந்த
அனுமனுடைய தலையிலும் மார்பிலும்; பச்சு இரத்தம் வந்து ஒழுகிட - புதிய
இரத்தம் வந்து ஒழுகும்படியும்; வானவர் பதைப்ப - (அது கண்டு) தேவர்கள்
துடிக்கும்படியாகவும்; வச்சிரத்தினும் வலியன வயிரவான் கணைகள் -
வச்சிராயுதத்தைக் காட்டிலும் வலிமை உடையனவான கூர்மையான பெரிய
அம்புகளை; அழுத்தலும் - அழுந்த எய்த போது; அனுமன் - ,

     நெடுஞ்சினங் கொண்டுநிமிர்ந்தான் என அடுத்த கவியோடு முடியும். 
                                                     (65)