5783. | பாகம்அல்லது கண்டிலன்; அனுமனைப் பார்த்தான்; மாக வன் திசைபத்தொடும் வரம்பு இலா உலகிற்கு ஏக நாதனை எறுழ்வலித் தோள் பிணிந்து ஈர்த்த மேக நாதனும்,மயங்கினனாம் என வியந்தான். |
மாகவன் திசை -பெரியவானம் முதலான; பத்தொடும் - வலிய திசைகள் பத்துடன்; வரம்பு இலா உலகிற்கு ஏகநாதனை - அளவற்ற உலகங்களுக்கு எல்லாம் தனித்தலைவனான இந்திரனை; எறுழ் வலித் தோள் பிணிந்து ஈர்த்த மேகநாதனும் - மிக்க வலிமையை உடைய தோள்களைக் கட்டி இழுத்த இந்திரசித்தும்; அனுமனைப் பார்த்தான் பாகம் அல்லது கண்டிலன் - அனுமனைப் பார்த்து, அவனது உருவில் ஒரு சிறு பகுதியே அல்லாமல் முழு உருவும் காணாதவனாகி; மயங்கினன் ஆம் என வியந்தான் - திகைப்புண்டவன் போல ஆச்சரியமுற்றான். (67) |