5789.

ஆர்த்தவானவர் ஆகுலம் கொளீஇ, அறிவு
                                அழிந்தார்;
பார்த்த மாருதி,தாரு ஒன்று அங்கையில் பற்றி,
தூர்த்த வாளிகள்துணிபட முறை முறை சுற்றி,
போர்த்த பொன்நெடு மணி முடித் தலையிடைப்
                               புடைத்தான்.

     ஆர்த்த வானவர்- முன்புமகிழ்ச்சியால் ஆரவாரம் செய்த
தேவர்கள்;ஆகுலம் கொளீஇ அறிவு அழிந்தார் - (அனுமான் தளர்ச்சி
உற்றது கண்டு)துன்பம் கொண்டு அறிவு கலங்கினார்கள்; பார்த்த மாருதி
தாரு ஒன்றுஅம்கையில் பற்றி -
அதுகண்ட அனுமன், (உடனே தளர்ச்சி
நீங்கி) ஒருமரத்தைத் தனது அழகிய கையிலே எடுத்துக் கொண்டு; தூர்த்த
வாளிகள்முறை முறை துணிபட -
(இந்திரசித்து) எய்து நிரப்புகின்ற
அம்புகள் எல்லாம்வரிசை வரிசையாகத் துண்டு பட்டொழியும்படி; சுற்றி -
அந்த மரத்தைச் சுற்றிவீசி; பொன்மணி நெடுமுடி போர்த்த தலையிடை -
பொன்னாலும்மணியாலும் செய்து நீண்டதாய் விளங்கிய கிரீடம் கவித்துள்ள
இந்திரசித்தின்தலையிடத்து; புடைத்தான் - (அம்மரத்தாலே) ஓங்கி
அடித்தான்.                                                (73)