5793. | கண்ணின்மீச் சென்ற இமை இடை கலப்பதன் முன்னம், எண்ணின் மீச்சென்ற எறுழ் வலித் திறலுடை இகலோன், புண்ணின் மீச்சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப, விண்ணின் மீச்சென்று, தேரொடும் பார்மிசை வீழ்ந்தான். |
எண்ணின் மீசென்ற எறுழ்வலி திறலுடை இகலோன் - எண்ணத்தைக் கடந்து சென்ற (வரம்பு கடந்த) மிக்க வலிமையுடைய பகைவனான இந்திரசித்து; தேரொடும் விண்ணின் மீ சென்று - (அனுமன் எடுத்தெறிந்த விசையினால்) தேரோடும் வானத்தின்மேல் எல்லையில் போய்; புண்ணின் மீ சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப - புண்களின் மேலே பெருகி வழிகின்ற இரத்தம் புதிய புலால் நாற்றத்தோடு வெளிப்பட; கண்ணின் மீ சென்ற இமை இடை கலப்பதன் முன்னம் - கண்களின் மேல்உள்ள இமை கீழிமையிலே வந்துகூடுவதன் முன்னம்; பார்மிசை வீழ்ந்தான் - தரையில் வந்து வீழ்ந்திட்டான். இந்திரசித்து,அனுமனால் வீசி எறியப் பட்டு, தேரோடு, கீழே வந்து விழும் வேகத்துக்கு, கண் இமை பொருந்தும் வேகம் உவமையாக்கப்பட்டது. (77) |