இந்திரசித்து அயன்படையை விடுத்தல்

5795.

ஏறு தேர்இலன்; எதிர் நிற்கும் உரன் இலன்;
                          எரியின்,
சீறு வெஞ் சினம்திருகினன், அந்தரம் திரிவான்,
வேறு செய்வது ஓர்வினை பிறிது இன்மையின்,
                          விரிஞ்சன்
மாறு இலாப்பெரும் படைக்கலம் தொடுப்பதே
                          மதித்தான்.

     ஏறு தேர் இலன் -(தான்மீண்டும்) ஏறிப் போர்புரிய வேறு தேர்
இல்லாதவனாய்; எதிர் நிற்கும் உரன் இலன் - (அனுமன்) எதிரே நின்று
போர் செய்யும் வலிமை அற்றவனாய்; எரியின் சீறு வெம் சினம் திருகினன்
-
தீப் போலச் சீறுகின்ற கொடிய சினத்தால் மாறுபட்டவனாகி; அந்தரம்
திரிவான் -
வானில் சஞ்சரிக்கும் இந்திரசித்து; வேறு செய்வது ஓர் வினை
பிறிது இன்மையின் -
செய்வதற்குரியதோர் செயல் வேறு இல்லாமையால்;
விரிஞ்சன் மாறு இலாப் பெரும் படைக்கலம் - பிரம்மதேவனுடைய நிகர்
இல்லாத பெரிய ஆயுதமாகிய பிரம்மாத்திரத்தை; தொடுப்பதே மதித்தான் -
தூண்டுவதாகிய கடுஞ் செயலையே செய்யத் துணிவு கொண்டான்.

     இந்திரசித்து,பிரம்மாத்திரத்தைத் தொடுக்கத் துணிவதன் காரணம்
கூறப்பட்டது. விரிஞ்சன் - பிரம்மன்.                            (79)