5797. | கொண்டு, கொற்ற வெஞ் சிலை நெடு நாணொடு கூட்டி, சண்ட வேகத்தமாருதி தோளொடு சாத்தி, மண் துளங்கிட,மாதிரம் துளங்கிட, மதி தோய் விண்துளங்கிட, மேரு துளங்கிட, விட்டான். |
கொண்டு -அவ்வாறுபிரம்மாத்திரத்தைக் கையில் கொண்டு; கொற்றவெம் சிலை நெடு நாணொடு கூட்டி - அதை, தனது வலிய கொடிய வில்லி்ன் நீண்ட நாணோடு சேர்த்து; சண்ட வேகத்த மாருதி தோளொடு சாத்தி - கொடிய வேகமுடைய அனுமனது தோள்களை இலக்காகக் குறிவைத்து; மண் துளங்கிட - பூமி நடு்ங்க; மாதிரம் துளங்கிட - திசைகள் நடுங்க; மதிதோய் விண் துளங்கிட - சந்திரன் தங்கிய வானம் நடுங்கிட; மேருவும் துளங்கிட - மேரு மலையும் நடுக்கம் கொள்ள; விட்டான் - அதனைத் தூண்டி விட்டான். இந்திரசித்துதெய்வத்தன்மையுள்ள பிரம்மாத்திரத்தை, அனுமனுடைய தோள்களைக் கட்டுமாறு மந்திரம் கூறி விட்டனன் என்க. மேருவும்; உம்மை உயர்வு சிறப்பினது. பிரம்மாத்திரத்தி்ன் வலிமை இச்செய்யுளில் தெரிவிக்கப்பட்டது. (81) |