அயன் படையில்கட்டுண்ட அனுமன் தோற்றம் 5802. | 'குரக்குநல் வலம் குறைந்தது' என்று, ஆவலம் கொட்டி இரைக்கும் மாநகர் எறி கடல் ஒத்தது; எம் மருங்கும் திரைக்கும்மாசுணம் வாசுகி ஒத்தது; தேவர், அரக்கர்ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன், அனுமன். |
குரக்கு நல் வலம்- குரங்கினுடைய நல்ல வலிமை; குலைந்தது என்று- நிலை கெட்டது என்று எண்ணிக் களித்து; ஆவலம் கொட்டி இரைக்கும்மாநகர் - வாய்விட்டு உரக்கக்கத்தி, முழக்கமிடும் அந்தப் பெரிய இலங்கைநகரம்; எறிகடல் ஒத்தது - அலைமோதும் கடலை ஒத்திருந்தது;எம்மருங்கும் திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது - எப்புறமும் அனுமன்உடலைச் சுற்றிப் பிணித்த பிரம்மாத்திரமாகிய பாம்பு வாசுகி என்னும் பாம்பைஒத்து விளங்கியது; அரக்கர் தேவர் ஒத்தனர் - அரக்கர்கள், முன் கடல்கடைந்த தேவர்களை ஒத்து விளங்கினர்; அனுமன் மந்தரம் ஒத்தனன் -(நாக பாசத்தால் சுற்றப் பட்ட) அனுமன், (வாசுகியால் சுற்றப்பட்ட) மந்தரமலையைப் போன்று விளங்கினான். (86) |