| 5807. | 'நச்சு அடைபடைகளால் நலியும் ஈட்டதோ, வச்சிர உடல் ?மறி கடலின்வாய் மடுத்து, உச்சியின்அழுத்துமின், உருத்து; அது அன்றுஎனின், கிச்சிடை இடும்'எனக் கிளக்கின்றார் சிலர். |
சிலர் - வேறுசிலர்;வச்சிர உடல் - இந்தக் குரங்கின் வயிரம் போன்ற உடல்; நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ ? - விஷம் தடவிய ஆயுதங்களைக் கொண்டு வருத்தி அழிக்கப்படத் தக்கதோ?; மறி கடலின் வாய் மடுத்து உச்சியின் உருத்து அழுத்துமின் - (அன்று என்றபடி) மடங்கிவிழும் கடலினிடம் தள்ளி (வெளிக்கிளம்பாதபடி) இதனைத் தலை உச்சியில்நன்றாக அழுத்துங்கள்; அது அன்று எனின் - அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால்; கிச்சிடை இடும் - நெருப்பிடை இட்டுக் கொல்லுங்கள்; என கிளக்கின்றார் - என்று சொல்வாராயினர். கிச்சு -நெருப்பு; கன்னடச்சொல். (3) |