5815.

'ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று, தன்
எளிவரவு; இன்றுஇதன் எண்ணம் வேறு' எனா,
'களி வருசிந்தையால் காண்டி ! நங்களைச்
சுளிகிலையாம்'எனத் தொழுகின்றார், சிலர்.

     இன்று - இப்பொழுது;தன் எளி வரவு - இக்குரங்கு கொண்டுள்ள
எளிமைத் தன்மை; ஒளிவரும் நாகத்துக்கு ஒல்கி அன்று - ஒளி
பொருந்தியநாக பாசத்துக்குத் தளர்ச்சியுற்றதனால் அன்று; இதன் எண்ணம்
வேறு எனா-
இக்குரங்கு கொண்டுள்ள எண்ணம் வேறாயிருக்கும் என்று
கருதி,(அனுமனை நோக்கி); களி வரு சிந்தையால் காண்டி - மகிழ்ச்சி
பொருந்தியமனத்தோடு எங்களைப் பார்ப்பாய்; நங்களை சுளி கிலை என -
எங்களைக்கோபிக்காதே என்று சொல்லி; சிலர் தொழுகின்றார் - சில
அரக்கர்கள்அனுமனைத் தொழுது வணங்குவாராயினர்.              (11)