5816.

பைங் கழல்அனுமனைப் பிணித்த பாந்தளை,
கிங்கரர்,ஒருபுடைக் கிளர்ந்து பற்றினார்-
ஐம்பதினாயிரர்,அளவு இல் ஆற்றலர்,
மொய்ம்பினின் எறுழ் வலிக் கருளன் மும்மையார்.

     அளவு இல்ஆற்றலர் - அளவற்ற வலிமை உடையவர்களும்;
மொய்ம்பினின் எறுழ் வலிகருளன் மும்மையார் -
தம் தம் பராக்கிரமத்தில்
மிக்கவர்களுமான; கிங்கரர் ஐம்பதினாயிரம் ஒரு புடைகிளர்ந்து -
ஐம்பதினாயிரம் ஏவலர்கள் ஒரு பக்கத்தில் வந்து கூடி நின்று; பைங்கழல்
அனுமனைப் பிணித்த பாந்தளைப் பற்றினார் -
பசுமையான வீரக்கழலை
உடைய அனுமனைக் கட்டியுள்ள நாக பாசத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு
செல்வாராயினர்.

     ஒரு புடை என்றதனால், மறுபக்கத்திலும் ஐம்பதினாயிரர் பற்றியிருக்க
வேண்டும் என்று உணரலாம்.                                  (12)