5821.

'நீரிடைக்கண் துயில் நெடிய நேமியும்,
தாருடைத் தனிமலர் உலகின் தாதையும்,
ஓர் உடல்கொண்டு, தம் உருவம் மாற்றினர்,
பாரிடைப்புகுந்தனர் பகைத்து' என்பார் பலர்.*

     நீரிடை கண்துயில் நெடிய நேமியும் - திருப்பாற்கடலில்பள்ளி
கொண்டுள்ள பெரிய சக்கராயுதத்தை உடைய திருமாலும்; தார் உடை
தனிமலர் உலகின் தாதையும் -
தாமரை மலர் மாலை அணிந்து உலகத்தைப்
படைத்தவனான பிரம்மதேவனும்; பகைத்து - அரக்கர்களோடு பகைமை
கொண்டு; ஓர் உடல் கொண்டு உருவம் மாற்றினர் - சேர்ந்து ஓர்
உடலைத்தாங்கி, தமது வடிவை மாற்றிக் கொண்டவர்களாய்; பாரிடை
புகுந்தனர் -
நிலவுலகத்தில் வந்து பிரவேசித்துள்ளார். என்பார் பலர் -
என்று கருதினர் பல அரக்கர்கள்.

     பிரம்மாவும்திருமாலும் தாமான தனித்தனி நிலையில் அரக்கர்களை
அழிக்கும் வலிமையற்றவர்களாய், ஒன்று ஆகிக் குரங்கின் வடிவில் வந்தனர்
எனக்கருதினர் பலர்.                                       (17)