5824.

'எந்தையதுஅருளினும், இராமன் சேவடி
சிந்தை செய்நலத்தினும், சீதை, வானவர்,
தந்து உளவரத்தினும், தறுகண் பாசமும்
சிந்துவென்;அயர்வுறு சிந்தை சீரிதால்;

     எந்தையதுஅருளினும் - என் தந்தையான வாயுதேவனது
கருணையினாலும்; இராமன் சேவடி சிந்தை செய் நலத்தினும் -
இராமபிரான்சிவந்த திருவடிகளை யான் தியானம் செய்யும் புண்ணியத்தாலும்;
சீதை,வானவர் தந்துள வரத்தினாலும் -
சீதா பிராட்டியும் தேவர்களும்
கொடுத்துள்ள வரங்களினாலும்; தறுகண் பாசமும் சிந்துவென் - கொடிய
இந்தப் பிரம்மாத்திரத்தையும் அற்றி சிதறிவிடச் செய்யவல்லேன் யான்;
அயர்வுறு சிந்தை சீரிது - (ஆயினும்) இதனால் நான் களைப்புற்றமனத்தோடு
இருப்பதே சிறப்புடைத்தாகும்.

     'அயர்வுறு சிந்தைசீரிது' என்ற தன் காரணம் அடுத்த நான்கு கவிகளில்
விளங்கும். அதற்காகத்தான், அனுமன், அரக்கர்கள் தன்னைக் கட்டி ஈர்த்துச்
செல்ல அடங்கியிருந்தான், என்பதாம். ஆல் - அசை.               (20)