கலிநிலைத்துறை 5842. | தலங்கள்மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்தென்ன அலங்கல்வெண்குடைத் தண் நிழல் அவிர் ஒளி பரப்ப, வலம் கொள்தோளினான் மண்நின்று வான் உற எடுத்த, பொம் கொள் மா மணி வெள்ளியங்குன்று எனப் பொலிய, |
அலங்கல்வெண்குடை - முத்து முதலியமணிச்சரங்கள் அசையப் பெற்ற வெண் கொற்றக் குடையானது; தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதிதழைத்து என்ன - மூவுலகங்களுக்கும் ஒளி வீசும் படி, வேறு ஒரு சந்திரன்சிறந்து விளங்குவது போல; தண் நிழல் அவிர் ஒளி பரப்ப - குளிர்ச்சியானநிழலையும் விளங்குகின்ற ஒளியையும் பரவச் செய்யவும்; வலம் கொள்தோளினால் - தன் வலிமை கொண்ட தோள்களால்; மண் நின்று வான் உறஎடுத்த - தரையிலிருந்து ஆகாயத்தை அளாவுமாறு மேலே தூக்கிய; பொலம்கொள் மாமணி வெள்ளியம் குன்று என பொலிய - அழகு கொண்டபெரிய சிறந்த கயிலையங் கிரியாகிய வெள்ளி மலைபோல, விளங்கவும். 'இருந்த' என(55வது பாடல்) முடியும். குடைக்கு மதியும், வெள்ளியங்கிரியும் உவமைகளாகக் கூறப்பட்டன. (38) |