5843. | புள் உயர்த்தவன் திகிரியும், புரந்தரன் அயிலும், தள் இல்முக்கணான் கணிச்சியும், தாக்கிய தழும்பும், கள் உயிர்க்கும்மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள் வள் உகிர்ப்பெருங் குறிகளும், புயங்களில் வயங்க, |
புள் உயர்த்தவன்திகிரியும் - கருடப் பறவை விளங்க உயர்த்தப்பெற்றகொடியை உடைய திருமாலினது சக்கராயுதமும்; புரந்தன் அயிலும் -இந்திரனது வச்சிராயுதமும்; தள் இல் முக்கணான் கணிச்சியும்- விலக்கமுடியாத, முக்கண்ணனாகிய சிவபிரானது சூலாயுதமும்; தாக்கிய தழும்பும் - தம் மீது பட்டு உண்டாக்கிய வடுக்களும்; கள் உயிர்க்கும் மென் குழலியர் - தேனைச் சொரியும் மிருதுவான கூந்தலைஉடைய தன் காதல் மகளிர்; முகிழ் விரல் - அரும்பு போல் குவிந்தவிரல்களில் உள்ள; கதிர்வாள் வள் உகிர் - சுடரோடு கூடிய வாள் போன்றகூரிய நக நுனிகளால் உண்டாகிய; பெரும் குறிகளும் புயங்களில் வயங்க -பெரிய அடையாளங்களும் பெரிய தோள்களில் விளங்கவும். இராவணனதுவீரத்துக்கும் காதலுக்கும் அடையாளமாக விளங்குகின்றன அவன் தோள்களில் காணப்படும் வடுக்கள் என்பது கருத்து. (39) |