5849.

ஏகநாயகன்தேவியை எதிர்ந்ததன் பின்னை,
நாகர் வாழ்இடம் முதல் என, நான்முகன் வைகும்
மாக மால்விசும்பு ஈறு என, நடுவண வரைப்பில்
தோகைமாதர்கள், மைந்தரின் தோன்றினர், சுற்ற,

     ஏக நாயகன்தேவியை எதிர்ந்ததன் பின்னை - (எல்லா
உயிர்கட்கும்)தனித்தலைவனான இராமபிரானுடைய தேவியாகிய பிராட்டியைச்
சந்தித்துநோக்கிய பிறகு; நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன்
வைகும்மாகமால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் -
நாகர்கள்
வாழும்இடமான பாதாளலோகம் முதலாக, பிரம்மதேவன் வாழ்கின்ற பெரிய
வானில்உள்ள ஆகாயமான சத்தியலோகம் ஈறாக, இடையில் உள்ள ஏனைய
உலகங்கள் அனைத்திலும் உள்ள; தோகை மாதர்கள்  - மயில் போன்ற
சாயலை உடைய மகளிர்கள்; மைந்தரின் சுற்ற தோன்றினர் - (இராவணன்
பார்வைக்கு) ஆடவர்கள் என்னுமாறு அவனைச் சூழ்ந்து விளங்கவும்.

     பிராட்டியைப்பார்த்த பிறகு இராவணன் கண்களுக்கு, பிற எந்த
உலகத்து அழகிய மகளிர்களும், காம எண்ணம் உண்டாக்கும் தன்மையற்ற
ஆடவர்களாகவே தோற்றினர் என்பது கருத்து.                    (45)